SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1091 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டினாலும் 2991 ஏரியில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை: 4689 ஏரிகளில் 1% முதல் 25% மட்டுமே நீர் இருப்பு

2020-11-22@ 00:59:48

சென்னை: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1091 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 2991 ஏரியில் ஒரு சொட்டு நீர் கூட  இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14 ஆயிரத்து 144 ஏரிகள் உள்ளது. இதில் 2040  ஏரிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் 410 ஏரிகளும் 326 ஏரிகளை கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 29 ஏரிகளும், 528 ஏரிகளை  கொண்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் 74 ஏரிகளும், 417 ஏரிகளை கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 ஏரிகளும், 87 ஏரிகளைக்கொண்ட  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 34 ஏரிகளும், 640 ஏரிகளை கொண்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் 143 ஏரிகளும், 781 ஏரிகளைக் கொண்ட நெல்லை  மாவட்டத்தில் 25 ஏரிகளும் 582 ஏரிகளை கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் 60 ஏரிகளும், 101 ஏரிகளை கொண்ட வேலூர் மாவட்டத்தில் 14  ஏரிகளும், 107 ஏரிகளை கொண்ட சேலம் மாவட்டத்தில் 14 ஏரிகளும் என மொத்தம் 1091 ஏரிகள் 100 சதவீதம்  தனது முழு கொள்ளளவை  எட்டியுள்ளன.

அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் 91 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 423 ஏரிகளும், 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை 822 ஏரிகளும், 25  சதவீதம் முதல் 50% வரை 2029 ஏரிகளும், ஒரு சதவீதம் முதல் 25% வரை 4689 ஏரிகளிலும் தண்ணீர் உள்ளது. 2991 ஏரியில் ஒரு சொட்டு கூட நீர்  இல்லை என்றும் பொதுப்பணித்துறையில் கணக்கீட்டின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மழை தொடரும் என்பதால் ஏரிகளின் நீர்மட்டம்  மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

89 அணைகளில் 149 டிஎம்சி நீர் இருப்பு                 
தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு,  பாபநாசம், மணிமுத்தாறு, வைகை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பவானிசாகர், சோலையாறு உட்பட 89 அணைகள் உள்ளன. மொத்தம் 223 டிஎம்சி  கொள்ளளவு கொண்ட 89 அணைகளில் தற்போது 149.18 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இது 66 சதவீதம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மழை  காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து நீர் வந்துகொண்டிருப்பதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்று அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்