காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்
2020-11-22@ 00:51:25

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்தெடுப்பதற்காக முதல் முறையாக டிஜிட்டல் முறையில் தேர்தல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். சோனியா காந்திக்கு உடல் நல பாதிப்புகள் இருக்கும் நிலையில், மீண்டும் ராகுலே தலைவராக வேண்டும் என்று அவரது ஆதரவு தலைவர்கள் வலியுறுத்தினார்கள். அதே நேரத்தில் கட்சியை சீரமைக்கும் வகையில் அனைத்து பிரிவுகளுக்கும் தேர்தல் நடத்தக்கோரி, 23 தலைவர்கள் கட்சியின் தலைமை சோனியாகாந்திக்கு கடிதம் எழுதினார்கள்..
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடவடிக்கைகளை கட்சி தொடங்கியுள்ளது. மதுசூதனன் தலைமையிலான காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையமானது டிஜிட்டல் தேர்தலை நடத்துவதற்கு தயாராகி வருகின்றது. டிஜிட்டல் முறையிலான தேர்தலுக்கு வாக்களிப்பவர்களுக்கு அனைத்து தகவல்களும் அடங்கிய டிஜிட்டல் அட்டையானது வழங்கப்படும். காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தேர்தலுக்கு தயாரானதும், காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் தேர்தல் நடத்துவதற்கு அனுமதி கேட்கப்படும். இரண்டு மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களில் இருந்தும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் பட்டியல் பெறப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லையில் சீனா ஊடுருவ முயற்சி?.. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் கட்டணம் திடீர் உயர்வு: இந்திய ரயில்வே அறிவிப்பு
மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்
நாட்டில் உள்ள அனைத்தையும் விற்கும் மோடி அரசு: இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும்: மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
தங்கம் போல் உயரும் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசை கண்டித்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மே.வங்க முதல்வர் மம்தா.!!!!
சர்ச்சைக்குரிய காட்சிகளை அரசு அல்லது நீதிமன்றம் நீக்க உத்தரவிட்டால் 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும்: OTT தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்