SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடப்பாடி பழனிசாமி எதைச் செய்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது: சேலம் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

2020-11-22@ 00:48:04

சென்னை: “எடப்பாடி பழனிசாமி எதைச் செய்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது. திமுக எனும் தேன்கூட்டில் கை வைக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’’ - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக தலைமையேற்றுச் பேசியதாவது: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என்று அறிவித்திருக்கிறேன். இது மாணவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது.

உடனே, எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசே செலுத்தும் என்று அறிவித்திருக்கிறார். முதல்வருக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அரசியல் செய்கிறது என்று அவர் சொல்லி இருக்கிறார். திமுக அரசியல் செய்ததால் தானே  இந்த அறிவிப்பை பழனிசாமி செய்திருக்கிறார்.. எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக தான் ஆளும்கட்சியாக செயல்படுகிறது என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.் திமுக இளைஞ ரணி செயலாளர் உதயநிதியின் பிரசார பயணத்துக்கு இந்த எடப்பாடி அரசு தடை விதித்து அவரைக் கைது செய்தது. ஏன் இந்த பயம்? உதயநிதி போகும் இடமெல்லாம் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடுகிறார்களே என்ற ஆத்திரத்தில் தடை செய்கிறார்கள்.

கைது செய்கிறார்கள். ஒரு உதயநிதி கிளம்பியதையே பழனிசாமியால் சகிக்க முடியவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் திமுகவின் முன்னணியினர் அனைவரும் தமிழகத்தின் நான்கு திசைகளிலும் எட்டு கோணத்திலும் வலம் வரும் போது எடப்பாடி என்ன செய்வார்? எத்தனை ஆயிரம் பேரைக் கைது செய்வார்?. பழனிசாமிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், நீங்கள் என்ன செய்தாலும் திமுக வெற்றியை தடுக்க முடியாது. இதுவரை எப்படி சும்மா இருந்தீர்களோ அதுபோலவே இந்த கடைசி ஐந்து மாதமும் சும்மா இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். திமுக என்ற தேன்கூட்டில் கை வைத்து விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறேன்.

1996 தேர்தல் முடிவை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அத்தகைய மகத்தான முடிவைத் தந்து, இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கு நாட்டு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். மக்கள் நலனில் அக்கறையில்லாத கூட்டத்துக்கு கோட்டையில் இடமில்லை என்பதைக் காட்டத் தமிழகம் தயாராகட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

சர்வதேச மீனவர் தின வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சர்வதேச மீனவர் தினமான 21ம் தேதி(நேற்று) தமிழக மீனவர்கள்  அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் நலனை பாதுகாத்து அவர்களும், அவர்களின் படகுகளும் அந்நிய ராணுவத்தின் எவ்வித தாக்குதலுக்கும், சேதத்திற்கும் உள்ளாகாமல் பாதுகாத்திட மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்