SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

2020-11-21@ 12:10:47

சென்னை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ.4740 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.160 உயர்ந்து ரூ.38,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,760க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ.66.80 விற்பனை ஆன நிலையில் இன்று 10 காசுகள் குறைந்து ரூ.66.70 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் அன்று தங்கம் விலை உயர்ந்தது. அதனை தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக‌ தங்கம் விலை குறைந்ததால் சவரன் ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கத்தில் விலை மூன்று நாட்களாக குறைந்து வந்ததால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்