SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜக அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்...இந்தியில் பதில் அளிக்கும் மத்திய அமைச்சகங்களுக்கு மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்!!

2020-11-20@ 12:47:03

சென்னை : இந்தியைத் திணிப்பதில் பிடிவாதமாக ஈடுபட்டுவரும் மத்திய பா.ஜ.க அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாக ஸ்டாலின் சாடியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

'தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசிடம் ஏதேனும் விவரங்கள் கேட்டு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு, மத்திய உள்துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களும் தொடர்ந்து  இந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது என்பது, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தையும், அதுதொடர்பான அரசாணைகளையும், அப்பட்டமாக மீறி அவமதிப்பு செய்கின்ற  மொழியாதிக்க - மொழிவெறி உணர்வையே வெளிப்படுத்துகிறது.

தி.மு.கழக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர், தொடர்புடைய துறைகளின் அமைச்சர்களுக்கு இதுகுறித்து கண்டனத்தைப் பதிவு செய்த பிறகே, ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாழ்படுத்திடும் வகையில், சிறிய சந்து பொந்து கிடைத்தாலும் அதையும் விடாமல் பிடித்துக்கொண்டு, இந்தியைத் திணிப்பதில் பிடிவாதமாக ஈடுபட்டுவரும் மத்திய பா.ஜ.க அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். அலுவல் மொழிச் சட்டத்தையும், அதில் தமிழகத்திற்குத் தரப்பட்டுள்ள தனிப்பட்ட உரிமையையும், இனியேனும் மத்திய பா.ஜ.க அரசு மதித்து, அதன்வழி நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.,' என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modipuudddhh

    புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!

  • maaaaaaaaa

    பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!

  • icvator25

    3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

  • sheep25

    ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!

  • 25-02-2021

    25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்