கும்பகோணம் அருகே கோயிலில் சிலைகள் உடைப்பு: போதை நபர்கள் 2 பேர் கைது
2020-11-20@ 12:23:44

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கோயிலில் இருந்த சிலைகளை உடைத்த போதை நபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் குப்பாங்குளம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு பூசாரி, பூஜையை முடித்து விட்டு கோயிலை பூட்டி சென்றார். இந்நிலையில் அன்று இரவு அதே பகுதியை சேர்ந்த விஜய் (32), கதிரவன் (48) ஆகியோர் போதையில் கோயில் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த நவக்கிரக சாமி சிலைகளை உடைத்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு அருகில் வசித்து வரும் கோயில் நிர்வாகி சக்கரவர்த்தி, கோயிலுக்கு விரைந்து சென்று பார்த்து போது அங்கு சிலைகள் உடைந்து கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் கூச்சலிட்டத்தால் பொதுமக்களும் கோயில் முன்பு திரண்டனர். தகவல் அறிந்த நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சாமி சிலைகளை சேதப்படுத்திய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..!
வாய்ப்பு முன்னாள் அமைச்சருக்கா? இந்நாள் எம்எல்ஏவுக்கா? செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி
ஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு
கொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சட்டமன்ற தேர்தலையொட்டி தேனி மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!