தேசிய மகளிர் அணி பாஜ தலைவராக பதவியேற்பு: கூட்டணிக்காக அதிமுகவுடன் எங்கள் கருத்தில் சமரசம் செய்ய முடியாது: வானதி சீனிவாசன் பேட்டி
2020-11-20@ 00:13:34

சென்னை: தமிழக பாஜ துணை தலைவராக இருந்த வானதி சீனிவாசன், பாஜ தேசிய மகளிர் அணி தலைவராக கடந்த 28ம் தேதி நியமிக்கப்பட்டார். நேற்று காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்கு சென்றார். தொடர்ந்து தேசிய மகளிர் அணி தலைவர் அறைக்கு சென்று அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு முறைப்படி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து அவர் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பதவியேற்புக்கு பின் வானதி சீனிவாசன் அளித்த பேட்டி: தமிழகத்தில் பாஜ வளர்ந்து வரும், மக்களின் விருப்பமான கட்சியாக உள்ளது.
அதனால் தான் நடைபெற்று வரும் வேல் யாத்திரையில் மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதற்கு மாநில அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தற்போதுவரை பாஜ-அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் கிடையாது. வர வாய்ப்பும் இல்லை. கூட்டணிக்காக கருத்தில் சமரசம் செய்ய முடியாது. கூட்டணியில் அடுத்தடுத்து வரும் காலகட்டங்களில் டெல்லி தலைமை தான் இறுதி முடிவு செய்யும். இருப்பினும், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதே பாஜவின் லட்சியமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் உள்ள ஊழல் அரசு தமிழகத்திற்கு ஆபத்து; அதை ஆதரிக்கும் பாஜக பேராபத்து: மு.க.ஸ்டாலின் பேட்டி
டாலர் சிட்டியில் அதிமுகவில் கடும் மல்லுக்கட்டு
கூவத்தூரில் பட்டபாடு... பெரும்பாடு... கடம்பூர் ராஜூ பிளாஷ்பேக்
எம்எல்ஏ பேச்சால் முகம் சுழிச்ச பெண்கள்
ராகுலை கிண்டலடிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கமிஷனோ கமிஷன்... ஆட்சி முடியும்போது பணத்தை அள்ளும் ஆட்சியாளர்கள்: தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர்கள் சங்க முன்னாள் தலைவர் ஜெ.கணேசன்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்