தங்கக்கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் தர நெருக்கடி!: சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு..!!
2020-11-19@ 14:39:17

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்புபடுத்தி வாக்குமூலம் அளிக்குமாறு அழுத்தம் தரப்படுவதாக சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியிருக்கிறார். கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரத்தில் உள்ள அடக்குமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷின் பேசும் ஒலிப்பதிவு ஒன்று கேரள ஊடகங்களில் வலம் வருகிறது. அதில் தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் தரவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் தரப்படுவதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில், கடந்த 6ம் தேதியில் இருந்து அமலாக்குத்துறையின் குற்றச்சாட்டு நகலை படிக்கவிடவில்லை.
படிக்கும் முன்பாகவே பக்கங்களை புரட்டிவிட்டனர். கடந்த அக்டோபர் மாதம் அரபு நாடுகளுக்கு சிவசங்கரனுடன் சென்றபோது, முதல்வருக்காக பேரம் பேசியதாக அந்த வாக்குமூலத்தில் இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அந்த வாக்குமூலத்தை ஒப்புக்கொண்டால் வழக்கில் அப்ரூவராக மாற வாய்ப்பு அளிக்கப்படும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாக வழக்கறிஞர் கூறுகிறார். எனது வழக்கறிஞர் மூலமாகவே எனக்கு அழுத்தம் தருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க அழுத்தம் தரப்படுகிறது என்று குற்றம்சாட்டியிருந்தாலும், அதற்கு காரணமானவர்கள் யார் என்று ஸ்வப்னா சுரேஷ் தெரிவிக்கவில்லை.
மேலும் செய்திகள்
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லையில் சீனா ஊடுருவ முயற்சி?.. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் கட்டணம் திடீர் உயர்வு: இந்திய ரயில்வே அறிவிப்பு
மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்
நாட்டில் உள்ள அனைத்தையும் விற்கும் மோடி அரசு: இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும்: மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
தங்கம் போல் உயரும் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசை கண்டித்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மே.வங்க முதல்வர் மம்தா.!!!!
சர்ச்சைக்குரிய காட்சிகளை அரசு அல்லது நீதிமன்றம் நீக்க உத்தரவிட்டால் 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும்: OTT தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்