SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3-வது நாளாக தொடர்ந்து சரிவில் ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.37,976-க்கு விற்பனை

2020-11-19@ 11:37:34

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.37,976க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.4,747க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.66.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்கு பின்பாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.37 ஆயிரத்து 976க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யும் வகையில் தங்களின் கவனத்தை தங்கத்தில் முதலீடு செய்து  வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த செப்டம்பர் மாதம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து மாற்றம் கண்டு வருகின்றது. அந்த வகையில், தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக கிராமுக்கு ரூ.152ம், பவுனுக்கு ரூ.1,216 வரையும் அதிகரித்தது.

இந்த விலை உயர்வு நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 11ம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.1,248 குறைந்து ஒரு சவரன் ரூ.38,128க்கும் விற்கப்பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு பின்னர் நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,408க்கு நகைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தொடர்ச்சியாக 3வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ. 4,747க்கும், சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.37,976க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.66.70க்கு விற்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்