சென்னையில் 8,000க்கும் கீழ் குறைந்த பரிசோதனை கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: வார்டுக்கு தினசரி 50 பரிசோதனை கட்டாயம்
2020-11-19@ 01:04:12

சென்னை: சென்னையில் கொரோனா சோதனை குறைந்து வருவதால் அதை அதிகரிக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி வார்டுக்கு தினசரி 50 பரிசோதனை எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 500க்கும் கீழ் பதிவாகிறது. மேலும் கொரோனா தொற்று எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 16ம் தேதி வரை சென்னையில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2,01,041 பேர் குணமடைந்துள்ளனர். 4822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3782 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் கொரோனா பரிசோதனை குறைந்து வருவதால் வார்டுக்கு தினசரி 50 பரிசோதனை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் கொரோனா ேசாதனையை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக வணிக நிறுவனங்கள், மார்க்கெட் பகுதிகளில் சோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வார்டுக்கு 50 முதல் 60 பரிசோதனை என்ற அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் பரிசோதனைக்கு மேல் எடுக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை
வைகோவுடன் பேரறிவாளன் சந்திப்பு
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வங்கி கணக்கு மூலம் நேரடியாக கிராம கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவு: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: திருநெல்வேலி வாலிபர் கைது
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!