அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளோம்.. இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள் : முதல்வர் பழனிசாமி பெருமிதம்!!
2020-11-18@ 14:59:27

சென்னை : மருத்துவ கலந்தாய்வில் முதல் 18 மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தமிழகத்தில் முதல் முறையாக இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் உள்ள மொத்த இடங்களில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கவுன்சலிங் இன்று தொடங்கி 20ம் தேதிவரை நடக்கிறது. இந்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 18 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதனால், பெரும் மகிழ்ச்சி அடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி,' இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள். அரசு பள்ளி மாணவர்களுக்கு நன்னாள். அரசுப்பள்ளியில் படித்தவன் என்கிற முறையில் எனக்கு மனநிறைவை ஏற்படுத்திய நாள். கொள்கை அளவில் நீட் தேர்வுக்கான தமிழக அரசின் எதிர்ப்பு தொடரும். நீட் தேர்வு ரத்து செய்ய கோரி பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன். சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறோம்.அரசு பள்ளியில் படித்துவரும் மாணவர்களுக்கு மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளோம். நீட் தேர்வை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு, வசதி குறைவாக இருந்தது. 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சுமார் 49 சதவீதம் பேர் அரசுப்பள்ளி மாணவர்கள். எனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி இந்த சட்டம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளது. நான் முதல்வரான பொறுப்பேற்றப் பின் தமிழகத்தில் 1,990 மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன,' என்றார்.
மேலும் செய்திகள்
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...! தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு
வேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு
அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி
சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..!
சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..!!
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!