கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதை அதிகாரிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்: உள்ளாட்சி துறை செயலாளர் அறிவுறுத்தல்
2020-11-18@ 01:09:39

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் ெவளியில் சுற்றுவதற்கு 200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். இந்நிலையில், சென்னையில் கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் நடைமுறையை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வழங்கிய அறிவுறுத்தலில், ‘‘கடந்த சில நாட்களாக கொரோனா விதிகளை மீறியவர்களிடம் இருந்து தினசரி வசூலிக்கப்படும் அபராதம் 4 லட்சத்தில் இருந்து ₹50 ஆயிரமாக குறைந்துள்ளது. எனவே அனைத்து வட்டார துணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. தற்போதுவரை சென்னையில் 3 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு
வேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு
அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி
சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..!
சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..!!
தேர்தல் விதிமுறை அமல் அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் அகற்றம்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!