அதிமுக எம்எல்ஏ மகனுக்கு குவாரி ஏலம் விவகாரம் சட்ட அறிவு இல்லாதவர் அமைச்சர் சி.வி.சண்முகம்: ஆர்.எஸ்.பாரதி பதிலடி
2020-11-18@ 00:51:35

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கை: ‘கடுகளவு கூட’ சட்ட அறிவு இல்லாத சி.வி.சண்முகம் எங்கள் தலைவரைப் பார்த்து ‘நுனிப்புல் மேய்பவர்’ என்று கூற என்ன அருகதை இருக்கிறது. எங்கள் தலைவரிடம் உள்ள நேர்மை கொஞ்சம் கூட அமைச்சருக்கு இல்லை. அதனால் தான் அவருக்கு ‘பொது ஊழியர்’ என்பதற்கும் அர்த்தம் தெரியவில்லை. ஓர் அமைச்சர், தன் கட்சி எம்எம்ஏவிற்கே டெண்டர் கொடுக்கலாமா, அரசு குவாரியைக் கொடுக்கலாமா என்ற அடிப்படையைத் தெரிந்து கொள்ளத் தனக்கும் சட்ட அறிவு கொஞ்சம் இருக்கிறது என்று நினைப்பாரேயானால் அந்த அறிவைக் கூட சி.வி.சண்முகம் பயன்படுத்திட முன்வரவில்லை. அந்த அளவிற்கு ஊழல் என்ற கனமழையில் இன்றைக்கு நனைந்து கொண்டிருக்கிறார்.
‘பொது ஊழியர்கள்’ குறித்து ஊழல் தடுப்புச் சட்டமும், இந்தியத் தண்டனைச் சட்டமும் என்ன சொல்கிறது? அவர்கள் என்ன செய்யக்கூடாது என்று கூறுகிறது என்பதைக் தெரிந்து கொள்ளவில்லை. அரசாங்கத்தில் டெண்டர் எடுப்பது என்ன தவறு என்று ஒரு அமைச்சர் பேசும் அதிசயம் தமிழக அமைச்சரவையில் தான் நடக்கும். அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் குவாரிகள் அரசின் சொத்து. அதை தன் இஷ்டத்திற்கு அமைச்சர் தன் கட்சி எம்எல்ஏ மகனுக்கு கொடுக்க எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. இந்த சட்டங்களை எப்போதாவது புரட்டிப் பார்த்திருந்தால் சி.வி.சண்முகம் இப்படி அபத்தமான வாதத்தை வைத்திருக்க மாட்டார்.
மேலும் செய்திகள்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 2வது நாளாக நேர்க்காணல்
மக்களால் மக்களுக்காகவே மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட திமுகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 11-ம் தேதி வெளியிடப்படும்: மு.க.ஸ்டாலின்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 6, 7ம் தேதிகளில் காங்கிரசில் நேர்காணல்: கே.எஸ்.அழகிரி தகவல்
தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினரிடம் நாளை ஒரே நாளில் நேர்காணல்: தலைமை கழகம் சார்பில் திடீர் அறிவிப்பு
கூடுதல் தொகுதி கேட்டு பெற தீவிரம்: தமாகாவுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் புதிய கட்சிகள் தொடங்க 7 நாள் மட்டுமே போதும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்