15 நாள் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று மாலை தமிழகம் வருகை
2020-11-17@ 16:02:56

மீனம்பாக்கம்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 15 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவருக்கு, விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை 5.05 மணிக்கு இந்திய விமானப்படை தனி விமானத்தில், தெலங்கானா மாநிலம் பேகம்பேட்டில் இருந்து சென்னை வருகிறார். பழைய விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சேஷாத்திரி அவீன்யூவிற்கு சென்று தங்குகிறார்.
24ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் குஜராத் மாநிலம் வதோரா செல்கிறார். மீண்டும் 25ம் தேதி பகல் ஒரு மணிக்கு தனி விமானத்தில் வதோராவிலிருந்து சென்னை வருகிறார். டிசம்பர் 2ம் தேதி காலை 8.55 மணிக்கு தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையம் பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை..! திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: தேர்வுத்துறை தகவல்
தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை...!
கடசுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க அனுமதி கோரி வழக்கு
தேர்தல் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் பொதுத்துறை இணைய தளத்தில் வெளியானது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நடைமுறை அமலாக்கத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை: விக்கிரமராஜா கோரிக்கை
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் விருதுகளை மீண்டும் வழங்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்