அரசு அனுமதித்தால் மட்டுமே முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படும்: கள இயக்குநர் தகவல்
2020-11-17@ 12:19:13

ஊட்டி: மத்திய, மாநில அரசுகள் அனுமதித்தால் மட்டுமே முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படும் என கள இயக்குநர் தெரிவித்தார். கொரோனா ஊரடங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள தற்போது பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் வருவதற்கும் இ பாஸ் முறை எளிமையாக்கப்பட்டு தற்ேபாது பதிவு செய்தால் மட்டுேம போதுமானது என அரசு தெரிவித்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படாத நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியியல் பூங்கா திறக்கப்பட்ட நிலையில், முதுமலை புலிகள் காப்பகமும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், புலிகள் காப்பகத்தை பாதுகாப்புடன் திறக்கலாம் என முதுமலை புலிகள் காப்பகம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. எனினும், மத்திய, மாநில அரசுகள் இதனை திறக்க இதுவரை அனுமதிக்கப்படவில்தலை. இது அனைவரையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்கநர் கவுசல் கூறியதாவது: முதுமலை புலிகள் காப்பகம் திறப்பது குறித்து இது வரை எங்களுக்கு எவ்வித கடிதமும் கிடைக்கப் பெறவில்லை. மத்திய, மாநில அரசுகள் அனுமதியளித்தால் மட்டுமே புலிகள் காப்பகம் திறக்கப்படும், என்றார். முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படாத நிலையில், கூடலூர், மசினகுடி, ஊட்டி போன்ற பகுதிகளில் உள்ள வியாபாரிகள், சுற்றுலா கார் ஓட்டுநர்கள் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள காட்டேஜ் உரிமையாளர்கள் மட்டுமின்றி, அவர்களை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Mudumalai Tiger Reserve will be opened if the government allows it the field director said அரசு அனுமதித்தால் முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படும் கள இயக்குநர் தகவல்மேலும் செய்திகள்
சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இதுவரை 5 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!!!!
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில நடவடிக்கை: பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி.!!!
தமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து... சிவகாசியில் மீண்டும் ஒரு வெடி விபத்து..: மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது; சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு
அரசு விழா,பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து, மற்றொரு பேருந்து மீது மோதி விபத்து: தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓட்டம்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்