ஜெகன் மோகனுக்கு எதிரான வழக்கில் நீதிபதி திடீர் விலகல்
2020-11-17@ 01:12:02

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா மீது குற்றச்சாட்டு தெரிவித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்கோகன் ரெட்டி கடந்த மாதம் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அதில், நீதிபதி என்.வி.ரமணா தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் யு.யு.லலித் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி யு.யு.லலித், ‘‘நான் வழக்கறிஞராக இருந்த போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளேன். அதனால் இந்த வழக்கை அமர்வு விசாரிப்பது சரியாக இருக்காது’’ என தெரிவித்தார். வேறு ஒரு புதிய அமர்வை நியமனம் செய்யக்கோரி தலைமை நீதிபதியிடம் பரிந்துரைதார். பின்னர், வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
மேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்
சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி
தமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்
பிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..!!
அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..!
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!