கொரோனா தொற்றில் இருந்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி குணமடைந்தார்
2020-11-17@ 00:41:33

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹூக்கு கடந்த 4ம் தேதி சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அவர் அன்றைய தினம் இரவு 7.40 மணிக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 3வது டவர் கட்டிடத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், கொரோனா ேசாதனையும் செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவருக்கு 11 நாள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை காரணமாக தொற்றில் இருந்து குணமடைந்த தலைமை நீதிபதி நேற்று வீடு திரும்பினார். அவரை மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன் வழியனுப்பி வைத்தார்.
மேலும் செய்திகள்
தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை...!
கடசுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க அனுமதி கோரி வழக்கு
தேர்தல் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் பொதுத்துறை இணைய தளத்தில் வெளியானது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நடைமுறை அமலாக்கத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை: விக்கிரமராஜா கோரிக்கை
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் விருதுகளை மீண்டும் வழங்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
நகைக் கடன்கள் தள்ளுபடி விவரங்களை கேட்டு அனைத்து மேலாண்மை இயக்குநர்களுக்கும் கடிதம்: சங்கங்களின் பதிவாளர் அனுப்பினார்
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!