SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை யானைக்கவுனியில் 3 பேரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் 3 பேரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போலீஸ் மனு

2020-11-16@ 16:43:39

சென்னை: சென்னை யானைக்கவுனியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கைலாஷ், ரவீந்தரநாத், விஜய் உத்தம் ஆகிய 3 பேரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சென்னை போலீஸ் மனு செய்துள்ளது. சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 3 பேருக்கு நவம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலைச் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைலாஷ், ரவீந்திரநாத், விஜய் உத்தம் என்ற 3 பேர் புனேவில் கைது செய்யப்பட்டு தமிழகம் அழைத்து வரவழைக்கப்பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  சென்னை சவுகார்பேட்டையில் கடந்த 11-ம் தேதி இரவு பைனான்ஸ் அதிபர், அவரது மனைவி, மகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மருமகளே சொத்துக்காக இந்தக் கொலையை கூலிப்படையை வைத்து செய்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து யானைகவுனி போலீசில் பிங்க் புகார் அளித்தார்.

இதனையடுத்து, பெருநகர சென்னை மாநகர கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், பூக்கடை துணை கமிஷனர் மகேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து, கொலையாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார், இறந்த 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் குடும்பத் தகராறு காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்தனர். இக்கொலை வழக்கு சம்பந்தமாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவின்பேரில், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்னர் ஜெயமாலா தனது இரு சகோதரர்களுடன் இணைந்து சென்னை வந்து ஷீத்தலை சந்தித்து ரூ.5 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். ஷீத்தலின் மனைவி ஜெயமாலா, 2 சகோதரர்கள் மற்றும் 3 கூலிப்படையினர் வீட்டுக்கு வந்து, சொத்தை பிரித்து தரும்படி சண்டை போட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் மோதல் எழுந்துள்ளது. அப்போது ஆத்திரத்தில் ஜெயமாலா மற்றும் சகோதரர்களுடன் வந்த 2 பேர் சேர்ந்து பைனான்ஸ் அதிபர் உள்பட 3 பேரையும் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 3 பேரையும் புனேவில் தனிப்படை போலீசார் கைது செய்து தமிழகம் அழைத்து வந்து சைதாப்பேட்டை சிறையில் அடைந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

 • 15-04-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-04-2021

  15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • singapore-door-robot

  சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்