மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்குக..!! மு.க.ஸ்டாலின் அறிக்கை
2020-11-14@ 14:48:06

சென்னை: மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தீவிபத்தில் உயிரிழந்த சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதுரை தெற்கு மாசி வீதியில் இருக்கும் ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது - திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து பேரதிர்ச்சிக்கும் பெருந்துயரத்திற்கும் உள்ளானேன். இருவரது மரணத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிர்த் தியாகம் செய்துள்ள அந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்து நிர்க்கதியாக நிற்கும் அந்தக் குடும்பங்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். தீயணைப்பு வீரர்கள் மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இதுபோன்ற தீயணைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இரு தீயணைப்பு வீரர்களையும் இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் சக வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கொரோனா 2வது அலை பரவல் எதிரொலி: திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் மூடல்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேக வாகனங்களால் அடிக்கடி விபத்து
தமிழக அரசின் சிறப்பு செயலாளர் ஆய்வு: ஆந்திர மாநிலம் நகரி ஆற்றில் ரூ17.86 கோடியில் தடுப்பணை
தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் பொன்னேரியில் தீத்தொண்டு வார விழா
வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவம் துவக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
திருப்பதி கோயிலுக்கு சென்றபோது மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.50,000 உரியவரிடம் ஒப்படைப்பு: போலீஸ்காரருக்கு பாராட்டு
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்