ஆர்கே நகர் தொகுதியில் கிடப்பில் உள்ள ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொது மேலாளரிடம் திமுக எம்பி கடிதம்
2020-11-13@ 00:05:08

சென்னை: வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நேற்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலை ஜங்சன் தண்டவாள பகுதியில் ரூ.117 கோடியில் மேம்பாலம் அமைக்க 2015ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் துவங்கப்படாததால், மீண்டும் ரூ.157 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து, கடந்த ஆண்டு மண் பரிசோதனை செய்தனர்.அதன்பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை. அதனால் வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடப்பதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிருக்கிறது. எனவே போர்க்கால அடிப்படையில் இந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் உள்ள ஊழல் அரசு தமிழகத்திற்கு ஆபத்து; அதை ஆதரிக்கும் பாஜக பேராபத்து: மு.க.ஸ்டாலின் பேட்டி
டாலர் சிட்டியில் அதிமுகவில் கடும் மல்லுக்கட்டு
கூவத்தூரில் பட்டபாடு... பெரும்பாடு... கடம்பூர் ராஜூ பிளாஷ்பேக்
எம்எல்ஏ பேச்சால் முகம் சுழிச்ச பெண்கள்
ராகுலை கிண்டலடிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கமிஷனோ கமிஷன்... ஆட்சி முடியும்போது பணத்தை அள்ளும் ஆட்சியாளர்கள்: தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர்கள் சங்க முன்னாள் தலைவர் ஜெ.கணேசன்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்