அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை : பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்
2020-11-12@ 11:23:59

நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து வாக்கிங் வித் தி காம்ரேட் புத்தகம் நீக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராயின் Walking With The Comrades புத்தகம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டது. ஆனால் இதற்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP எதிர்ப்பையடுத்து எம்.ஏ.ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் அருந்ததிராய் மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் பகுதிகளுக்கு சென்ற அனுபவம் குறித்து எழுதியிருந்தார்.இந்நிலையில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து பல்கலை. குழுவின் முடிவுப்படி அருந்ததிராயின் புத்தகம் நீக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார். 4 வருடமாக இருந்த பாடம் நான்கே நாட்களில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அருந்ததிராயின் புத்தகத்திற்கு பதிலாக எழுத்தாளர் கிருஷ்ணனின் My Native Land என்ற புத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாக்கிங் வித் தி காம்ரேட் புத்தகம் நீக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
'பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில்
அருந்ததிராய் படைப்பு
நீக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்.
அறிவுத்துறையை அரசியல்
சூழ்வது அறமில்லை.
சாளரத்தை மூடிவிட்டால்
காற்றின் வீச்சு நிற்பதில்லை,'
எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை...!
கடசுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க அனுமதி கோரி வழக்கு
தேர்தல் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் பொதுத்துறை இணைய தளத்தில் வெளியானது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நடைமுறை அமலாக்கத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை: விக்கிரமராஜா கோரிக்கை
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் விருதுகளை மீண்டும் வழங்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
நகைக் கடன்கள் தள்ளுபடி விவரங்களை கேட்டு அனைத்து மேலாண்மை இயக்குநர்களுக்கும் கடிதம்: சங்கங்களின் பதிவாளர் அனுப்பினார்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்