திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.1.67 கோடி உண்டியல் வருமானம்
2020-11-11@ 20:22:22

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடந்த 7.7.20 தேதியிலிருந்து 10.11.20ம்தேதி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் நேற்று கோயில் இணை ஆணையர் (பொறு) கல்யாணி தலைமையில் திறந்து எண்ணப்பட்டன. உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையர்கள் தூத்துக்குடி ரோஜாலிசுமதா, திருச்செந்தூர் செல்வராஜ், ஆய்வர்கள் திருச்செந்தூர் முருகன், ஏரல் சிவலோகநாயகி, அலுவலக கண்காணிப்பாளர் சீதாலட்சுமி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், சிவகாசி பதினெண்சித்தர் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர்கள் ஈடுபட்டனர்.
இதில் நிரந்தர உண்டியலில் ரூ.1 கோடியே 66 லட்சத்து 76 ஆயிரத்து 458ம், கோசாலை உண்டிய லில் ரூ.69 ஆயிரத்து 506ம், யானை பராமரிப்பு ரூ.16 ஆயிரத்து 594ம் என மொத்தம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 62 ஆயிரத்து 558 கிடைத்துள்ளது. மேலும் 1550 கிராம் தங்கம், 12 கிலோ 608 கிராம் வெள்ளி, 70 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் 1ம்தேதி முதல் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
எந்த கட்சிக்கு வாக்கு?: ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
மேலூரில் சாலையின் நடுவில் தடுப்புசுவர் அமைக்கும் பணி தீவிரம்: இடைவெளி விட்டு அமைக்க கோரிக்கை
கொள்முதல் நிலையம் இல்லாததால் வீணாகி வரும் நெல் மூடைகள்: அதிகாரிகள் வேடிக்கை
கம்பம் 8வது வார்டில் ஜல்லி பரப்பியாச்சு; சாலைப் பணி எப்போ: போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதி
தமிழகம் மாளிகை பூங்காவில் புதிர் விளையாட்டு தளம் அமைப்பு
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!