பண்ணாரி அம்மன் கோயில் அருகே வாகன ஓட்டிகளை துரத்திய ஒற்றை யானை: வீடியோ வைரல்
2020-11-11@ 14:58:16

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் அருகே சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை யானை தாக்க முயற்சித்த வீடியோ வைரலாகி வருகிறது.தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் முக்கிய சாலையாக ஈரோடு அடுத்த திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. மலைக்கிராமங்களுக்கு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக செல்கின்றனர். பண்ணாரி சோதனைச்சாவடி அருகே முகாமிட்டுள்ள யானைகள் கூட்டம் கரும்பு லாரிகளை தேடி குட்டிகளுடன் உலாவுகின்றன.
நேற்று மதியம் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கரும்பு லாரிகளை எதிர்பார்த்து காத்திருந்தது. அப்போது திம்பம் மலைப்பாதையில் இருந்து சென்று கொண்டிருந்த வாகனத்தை சாலையோரம் நின்று கொண்டிருந்த யானை துரத்தியது. இதனைத் தொடர்ந்து பண்ணாரியில் இருந்து மைசூர் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளையும் யானை தாக்க முயற்சித்தால் அவர்கள் திரும்பி சென்றனர். யானையின் அட்டகாசத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையோரம் திரியும் யானைகள் திடீரென தாக்க முற்படுவது அடிக்கடி நடப்பதால், வாகன ஓட்டிகள் யானைகளை தொந்தரவு செய்யமால் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
மேலும் செய்திகள்
தேர்தல் நடத்தை விதி எதிரொலி!: கரூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ. 2.93 லட்சம் பறிமுதல்...தேர்தல் பறக்கும் படை அதிரடி..!!
கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள நகைக்கடன்கள் எவ்வளவு? கூட்டுறவு வங்கிகளுக்கு சுற்றறிக்கை
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலிலும் 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? அதிகாரிகளுடன் அளுநர் தமிழிசை 2-வது முறையாக ஆலோசனை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை
பெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை: 4 மணி நேரம் நடந்தது
தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஏப்.30க்குள் நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்