உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி கைது
2020-11-11@ 01:16:37

மதுரை: மதுரை உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். மதுரை உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலராக சோமசுந்தரம் உள்ளார். இவரை சில தினங்களுக்கு முன் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தமிழக முதல்வரின் செயலர் ஒருவரின் பெயரைக் கூறி, தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறியுள்ளார். பின்னர், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் குளறுபடிகள் நடப்பதாகவும் அது தொடர்பாக ஆடிட்டிங் செய்ய மதுரை வந்ததாகவும் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகார தோரணையில் கேட்டுள்ளார்.
மீண்டும் 2 நாட்களுக்கு முன், ஒரு ஓட்டலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த சோமசுந்தரத்திற்கு, மர்ம நபரிடமிருந்து போன் வந்தது. அப்போது, அருகிலிருந்த ஒரு நபர்தான் தன்னுடன் போனில் பேசுகிறார் என்பது தெரிந்தது. உடனே அலுவலர் சோமசுந்தரம், அந்த நபரை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது அந்த நபர் தனக்கு பல்வேறு பணிகள் இருப்பதால் ஓரிரு நாட்கள் தங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதையடுத்து அந்த நபரை தனது வீட்டிற்கே அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார். மேலும், அவரை செல்போனில் போட்டோ எடுத்த சோமசுந்தரம், அதை சுகாதாரத்துறை செயலருக்கும், முன்னாள் கலெக்டர் வினய்க்கும் அனுப்பி, இவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருவரும் இப்படி ஒரு ஐஏஎஸ் அதிகாரியே இல்லை என்று கூறவே, தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. நேற்று முன்தினம் காலை போலீசார், சோமசுந்தரத்தின் வீட்டிற்கு வந்து, மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான், அந்த நபர், மதுரை மாவட்டம், சோழவந்தான் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (37) என்பது தெரிந்தது. அவரிடமிருந்த போலி கால்நடை மருத்துவருக்கான அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
Tags:
Food security officer intimidated fake IAS officer arrested உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி கைதுமேலும் செய்திகள்
திருவாரூர் அருகே 4 வயது சிறுவனை எரித்துக்கொன்ற கொடூர தந்தை: ஜோதிடர் காரணமா? போலீசார் விசாரணை
தங்கம், லேப்டாப், சிகரெட் கடத்தல்: 3 பேர் கைது
உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது
மினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது
சுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்
கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்