குறு, சிறு தொழில்களுக்கு புது விதிகள் திவால் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு: குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க திட்டம்
2020-11-09@ 01:17:13

புதுடெல்லி: திவால் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை வரும் குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, திவால் நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் பெரு நிறுவனங்களுக்கு சிறப்பு திட்டங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு விதிகளை உருவாக்கவும், திவால் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள வழக்குகளை ஏற்பதில் தாமதத்தை களையும்வகையிலும் திருத்தங்கள் இடம்பெறும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போதைய தேவை கருதியே சில திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இது குறித்த பரிந்துரைகளை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இதன் அடிப்படையில்தான் சட்ட விதிகள் திருத்தப்பட உள்ளன. இந்த குழு, தொழில்துறையினர், சங்கங்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றுள்ளது. இதுபோல், திவால் நடவடிக்கை வாரியம் சார்பிலும் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல், பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகர் ஏற்படுத்திய பல்வேறு துணை குழுக்களும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் திவால் நடைமுறையை விரைவாகவும் சிக்கலின்றியும் நடைமுறைப்படுத்துவற்கான தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்து வருகின்றன.
ஆனால்,இந்த திட்டங்கள் குறித்த இறுதி முடிவை திவால் வாரியம்தான் எடுக்கும். அமெரிக்கா, இங்கிலாந்தில் உள்ள நடைமுறைகளை போன்ற இந்த திவால் நடவடிக்கைக்கான திருத்தங்கள் இருக்கும். இதன்படி, நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனங்களும் கடன் வழங்கிய அமைப்புகளும் திவால் நடவடிக்கைக்கு முன்பே ஒப்பந்தம் செய்ய வேண்டி வரும். அதேநேரத்தில், திவால் நிலையில் உள்ள நிறுவன உரிமையாளர், திவால் நடைமுறைகள் முடியும் வரை அந்த நிறுவனத்தின் உரிமையை தக்க வைத்துக்கொள்ளலாம். இருப்பினும் கடன் வழங்கிய நிறுவனத்தின் குழு முடிவே இறுதியானதாக இருக்கும் என்றார். கடைசியாக திவால் சட்டத்தில் கடந்த ஜூன் மாதம் திருத்தம் செய்யப்பட்டது. இதில் 7 மற்றும் 9வது பிரிவுகள் நீக்கப்பட்டன.
மேலும் செய்திகள்
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
27,000 முதல் 44,000 வரை மாருதி கார் விலை சலுகை பெற இன்றே கடைசி நாள்
இனி தங்க வேட்டை தான்... ஆபரணத் தங்கத்தின் விலை செம குறைவு... சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை!!
செம தள்ளுபடியில் தங்கம் விலை.. நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. 6வது நாளாக விலை சரிவு... சவரன் ரூ.37.416க்கு விற்பனை!!
செம சரிவில் தங்கம் விலை... தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1,664 அளவுக்கு குறைந்து ரூ.37,440க்கு விற்பனை!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில் சதம் அடித்த முருங்கைக்காய்: உச்சமடையும் கத்தரிக்காய் விலை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்