மனைவிக்கு பிரசவம் இருப்பதால் ஆஸி.க்கு எதிராக கடைசி 2 டெஸ்ட்டில் இருந்து விலக கோஹ்லி முடிவு
2020-11-08@ 16:59:26

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வரும் 27ம் தேதி முதல் ஆஸ்திரேலியவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்தபின் துபாயிலிருந்து 12ம் தேதி புறப்படும் 32 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள், ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமை முகாமில் இருப்பார்கள். அதன்பின் அங்கு பயிற்சியைத் தொடங்குவார்கள். டி.20, ஒரு நாள் போட்டிக்கு பின்னர் டிசம்பர் 17ம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது. 2ம் டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26-30 வரை பாக்ஸிங்டே போட்டியாக நடக்கிறது. 3ம் டெஸ்ட் போட்டி ஜனவரி 7-11 வரை சிட்னியிலும், கடைசி மற்றும் 4வது டெஸ்ட் பிரிஸ்பேனில் 15-19ம் தேதிவரையிலும் நடக்கிறது.
இதனிடையே கர்ப்பமாக இருக்கும் கோஹ்லி மனைவி அனுஷ்காவிற்கு ஜனவரியில் பிரசவம் நடைபெற உள்ளது. இதனால் கடைசி போட்டிகளில் கோஹ்லி விளையாடமாட்டார் என தெரிகிறது. தனது மனைவி மகப்பேறுக்காக விடுப்பு எடுக்க முடிவு செய்திருப்பதால், அவர் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார். வழக்கமான நாட்களாக இருந்தால், ஒரு போட்டியில் மட்டுமே விளையாடாமல் இருப்பார். தற்போது கொரோனா கால தனிமைப்படுத்துதல் உள்ளதால் முதல் இரு டெஸ்ட் போட்டிகளோடு அவர் இந்தியாவுக்கு திரும்பி விடுவார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கோஹ்லிக்கு பதிலாக ரகானே அணியை வழிநடத்துவார்.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
மயாமி ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் குவித்தோவா: அல்கரஸ் முன்னேற்றம்
அயர்லாந்துடன் முதல் டி20 வங்கதேசம் வெற்றி
லக்ஸம்பர்க் அணிக்கு எதிராக ரொனால்டோ அசத்தல்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் வர்ணனையாளராக பங்கேற்ப்பார் என தகவல்
சென்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்த டி20 போட்டியில் பல சர்வதேச சாதனைகள் உடைந்தது: 81 பவுண்டரிகள் 35 சிக்சர்கள்!
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!