ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதியகோரி மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
2020-11-07@ 00:15:59

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை டிசம்பர் 17ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் 2013ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2014ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், ரூ.7 கோடி அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்ந்துள்ள ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு, கடந்த 1996ம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சி தலைவராக ராஜேந்திர பாலாஜி பதவியில் இருந்தது முதல் அவருடைய சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பிக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும் செய்திகள்
ஸ்மார்ட் சிட்டி கடைகள் அமைப்பதை எதிர்த்து மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மெரினாவில் வியாபாரிகள் போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது
ராகுல்காந்தி பூரண நலம்பெற வேண்டி காங்கிரஸ் கட்சியினர் 108 பால்குட ஊர்வலம்
தமிழகத்தில் தினசரி பாதிப்பு 13,000ஐ தாண்டியது: கொரோனாவால் ஒரே நாளில் 13,776 பேர் பாதிப்பு; 78 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை.!!!
வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு..!
ஆன்லைன் முறையை பயன்படுத்துங்கள்..! தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி தொடர்பான அவதூறு வழக்கு: முன்ஜாமின் கோரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல்..!
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!