அறந்தாங்கியில் போலீசுக்கு கப்பம் கட்டி லட்சக்கணக்கான பணத்துடன் களைக்கட்டும் சூதாட்ட கிளப்: வைரலாகும் அதிமுக பிரமுகரின் ஆடியோ
2020-11-06@ 19:52:43

அறந்தாங்கி: அறந்தாங்கியில் போலீசுக்கு கப்பம் கட்டு லட்சகணக்கான பணத்துடன் சூதாட்ட கிளப் நடந்து வருவது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என அதிமுக பிரமுகர் ஒருவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களப்பக்காட்டை சேர்ந்தவர் சக்திவேல். இவர் துரையரசபுரம் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றியவர். அதிமுக தொழிற்சங்க நிர்வாகி. இவரது மகன் பார்த்திபன் தற்போது அறந்தாங்கி நகர அதிமுக துணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், சக்திவேல் எஸ்பிக்கு பேசுவது போன்ற ஆடியோ மற்றும் சிலர் சீட்டு ஆடுவது போன்ற படங்கள் நள்ளிரவு முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில் சக்திவேல் பேசியதாவது: சாரி சார் மன்னிக்கவும் சார். நான் அறந்தாங்கி களப்பக்காட்டில் இருந்து சக்திவேல் பேசுறேன். இந்த பாரதிநகரில் வந்து மனமகிழ் மன்றம்ங்ற பெயர்ல ஒரு சீட்டாட்ட கிளப் நடந்து வருது சார். அதுக்கு யார் பர்மிசன் கொடுத்தாங்கன்னு தெரியல. அந்த கிளப்பை சுத்தி வீடுகள் இருக்கு. கிளப்பில் பாத்ரூம் இல்ல, லெட்டீன் இல்ல. பல ஆயிரம் ரூபாய் பணம் வச்சி சீட்டாடிகிட்டு இருக்காங்க. இது விஷயமா நான் அறந்தாங்கி டி.எஸ்.பி சார், இன்ஸ்பெக்டர் சார்கிட்டயும் பேசியாச்சி. எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆனால் அந்த கிளப் நடக்குற இடத்தில தப்பான செய்தியை பரப்பிக்கிட்டு இருக்கான். நாங்கள்லாம் ஐகோர்ட்டுல ஆர்டர் வாங்கிட்டோம். காவல்துறையை கவனிச்சிட்டோம்னு ஒரு தப்பான செய்தியை பரப்புறான்.
கிளப் டே அண்டு நைட்டா ஓடிகிட்டு இருக்கு சார். வெளியூர்ல இருந்தும் ஆள் வர்றாங்க. பார் மாதிரி பிராந்தி சரக்கு சாப்பிடுறது, போறது. எல்லாமே ஓடிட்டு இருக்கு. தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறேன் சார். அறந்தாங்கி நகரில் காரைக்குடி சாலை, பேருந்து நிலையம் அருகில் மற்றம் சக்திவேல் குறிப்பிட்ட பாரதிநகர் உள்ளிட்ட 3 இடங்களில் காவல்துறையின் ஒத்துழைப்புடன் பெரிய அளவில் சீட்டாட்ட கிளப்புகள் நடந்து வருகின்றன. இந்த 3 இடங்களிலும் தினசரி பல லட்ச ரூபாய் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகவும், கொரோனா காலம் என்பதால், இந்த சூதாட்டத்தில் விடுமுறையில் உள்ள கல்லூரி மாணவர்கள் கூட வீட்டிற்கு தெரியாமல் பணம் வைத்து சூதாடி பணத்தை இழந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து எஸ்பி பாலாஜி சரவணனிடம் கேட்டபோது, ‘‘இதுபற்றி தகவல் ஏற்கனவே வந்துள்ளது. எனது சிறப்பு குழுவினரை அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.
மேலும் செய்திகள்
சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இதுவரை 5 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!!!!
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில நடவடிக்கை: பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி.!!!
தமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து... சிவகாசியில் மீண்டும் ஒரு வெடி விபத்து..: மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது; சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு
அரசு விழா,பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து, மற்றொரு பேருந்து மீது மோதி விபத்து: தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓட்டம்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்