SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தடையை மீறி வேல்யாத்திரை நடத்தி கைதான பாஜக-வினர், திருமண மண்டபத்தில் போதிய வசதி இல்லை என திடீர் சாலை மறியல்: போலீஸ் அதிகாரி சட்டையை பிடித்து வாக்குவாதம்

2020-11-06@ 18:04:34

சென்னை: தடையை மீறி வேல்யாத்திரை நடத்தி கைதான பாஜக-வினர் திருமண மண்டபத்தில் வசதி இல்லை என திடீர் சாலை மறியலில் ஈடுபட்டததோடு மட்டுமில்லாமல் போலீஸ் அதிகாரி சட்டையை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். பா.ஜனதா சார்பில் நடத்தப்படும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தடையை மீறி இன்று காலை கோயம்பேட்டில் உள்ள பா.ஜனதா தலைவர் எல்.முருகன் வீட்டிலிருந்து பா.ஜனதா வேல் யாத்திரையானது தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. தற்போது மதுரவாயல், பூந்தமல்லி வழியாக திருத்தணி செல்ல முடிவு செய்யப்பட்டதையடுத்து பூந்தமல்லி அடுத்த திருமழிசை கூட்டு சாலையில் தடையை மீறி வரும் பாஜகவினரை கைது செய்வதற்காக கூடுதல் கமிஷனர் அருண், இரண்டு இணை கமிஷனர்கள், மூன்று துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 500 க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை போலீஸ் மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீசின் எல்லையை பிரிக்கும் இந்த பகுதியில் இரண்டு மாவட்ட போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பாஜகவினர் வாகனங்கள் தடுத்து நிறுத்துகின்றனர். பாஜக கொடியுடன் வரும் வாகனங்களை மடக்கி அந்த வாகனங்களை திருப்பி அனுப்புகின்றனர். தற்போது திருமழிசை கூட்டு சாலையில் தடையை மீறி வரும் பாஜகவினரை கைது செய்வதற்கு முழுவீச்சில் போலீசார் தயார் இருந்தனர். கோயம்பேடு, மதுரவாயல், வேலப்பன்சாவடி, பூவிருந்தவல்லி வழியாக வந்த வேல் யாத்திரையை பூவிருந்தவல்லி - திருமழிசை கூட்டுச் சாலையில் இரும்புத் தடுப்புகள் அமைத்து போலீஸார் தடுத்தனர். அங்கு போலீஸாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவில், தான் சாமி கும்பிடுவதற்கு மட்டுமே செல்வதாகக் கூறிய பாஜக தலைவர் முருகனை போலீஸார் அனுமதித்தனர். பாஜக தலைவர் முருகனோடு சேர்த்து 10 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதனைப் பின்தொடர்ந்து வந்த பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் அங்கேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவருடன் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொண்டார். பின்னர் திருத்தணியில் சாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்குள் முருகன், அமைச்சர் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி, ஹெச்.ராஜா, அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்டோரை மட்டும் போலீசார் அனுமதித்தனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு யாத்திரையைத் தொடங்க முருகன் கிளம்பினார். அவரையும் உடன் வந்த ஹெச்.ராஜா, அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்டோரையும் போலீசார் தடுத்துக் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் யாத்திரை நடத்திய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாஜக வினரை கைது  செய்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையிலான போலீசார் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.அப்போது அங்கு மின்சாரம் இன்றி இருந்ததால் ஆத்திரமடைந்த பாஜகவினர் கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்  மண்டபத்தில் மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்று திடீர் மறியல் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பேச்சுவார்த்தை நடத்திய எஸ்.பி சட்டையை பிடித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் சட்டையை பிடித்து தள்ளி விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கட்சியினரை சமரசம் செய்து போராட்டத்தை கைவிட செய்து மீண்டும் மண்டபத்திற்குள் சென்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • icvator25

  3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

 • sheep25

  ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!

 • 25-02-2021

  25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayyaaaa_bdaayy

  73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

 • golfer-woods

  அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்