கடலூரில் பரபரப்பு செம்மண் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு-பொதுமக்கள் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை
2020-11-06@ 12:30:12

கடலூர் : கடலூர் கேப்பர் மலை பகுதியில் செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரியில் இருந்து தினமும் ஏராளமான லாரிகள் செம்மண் ஏற்றிக்கொண்டு புருகீஸ்பேட்டை, வடுகப்பாளையம், காந்தி நகர் வழியாக செல்கிறது. இதனால் அப்பகுதி சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும் லாரிகளில் இருந்து செம்மண் சாலையில் விழுந்து மழை நீரில் கரைந்து சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்படும் நிலை உள்ளது.
அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை காந்தி நகர் பகுதியில் செம்மண் ஏற்றி வந்த லாரியை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பொது மக்கள் கூறுகையில், எங்கள் பகுதி வழியாக செம்மண் லாரிகள் அதிகம் செல்வதால் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் எங்கள் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே இந்த வழியாக செம்மண் லாரிகள் செல்லாமல் மாற்று பாதை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகள்
வாக்களர்களின் பிள்ளைகளுக்கு லஞ்சமா?: தஞ்சையில் ஜெயலலிதா, எடப்பாடி உருவ படம் பதித்த இலவச புத்தக பைகள் மூட்டை மூட்டையாக பறிமுதல்!!
கடலூர் மாவட்டம் வேப்பூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 40 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின!: தேர்தல் பறக்கும் படை அதிரடி..!!
வனப்பகுதி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கோரி வழக்கு
யாரிடமும் நாம் கெஞ்சவில்லை தேமுதிகவிடம்தான் அதிமுக கெஞ்சுகிறது: எல்.கே.சுதீஷ் கெத்து
கொடைக்கானலில் காட்டுத்தீ
துறைமுகம் அமைக்கும் திட்டம் அதானிக்கு தாரைவார்ப்பா? குமரியை அழிக்கும் திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம்: எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவிப்பு
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்