திருப்பூரில் முதல்வர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை
2020-11-05@ 14:29:44

திருப்பூர்: திருப்பூருக்கு முதல்வர் நாளை வருவதை முன்னிட்டு அவரது நிகழ்சியில் பங்கேற்க உள்ள செய்தியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை(வெள்ளிகிழமை) திருப்பூருக்கு வருகிறார்.
இந்நிலையில் முதல்வரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள அரசுத்துறை அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், பயனாளிகள் மற்றும் விவசாயிகள் ஆகிய 200க்கும் மேற்பட்டோருக்கு நேற்று கலெக்டர் அலுவலத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அனைவரும் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வாக்களர்களின் பிள்ளைகளுக்கு லஞ்சமா?: தஞ்சையில் ஜெயலலிதா, எடப்பாடி உருவ படம் பதித்த இலவச புத்தக பைகள் மூட்டை மூட்டையாக பறிமுதல்!!
கடலூர் மாவட்டம் வேப்பூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 40 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின!: தேர்தல் பறக்கும் படை அதிரடி..!!
வனப்பகுதி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கோரி வழக்கு
யாரிடமும் நாம் கெஞ்சவில்லை தேமுதிகவிடம்தான் அதிமுக கெஞ்சுகிறது: எல்.கே.சுதீஷ் கெத்து
கொடைக்கானலில் காட்டுத்தீ
துறைமுகம் அமைக்கும் திட்டம் அதானிக்கு தாரைவார்ப்பா? குமரியை அழிக்கும் திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம்: எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவிப்பு
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்