தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் தலைமையகத்தில் சிறப்பு வகை இனிப்புகள் விற்பனை துவக்கம்
2020-11-05@ 00:27:32

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் தலைமையகத்தில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனையை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகளான ஸ்டப்டு டிரை ஜாமுன்(250 கி) - 190, நட்டி மில்க் கேக் (250 கி) - 190, ஸ்டப்டு மோதி பாக் (250கி) - 170, காஜு பிஸ்தா ரோல்(250 கி) - 225, காபி பிளேவர்டு மில்க் பர்பி (250 கி) - 165,
நெய் முறுக்கு மற்றும் மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய காம்போ பேக் (500 கி) - 375 ஆகியவற்றின் விற்பனையை துவங்கியுள்ளது. மேலும் தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகள் ஸ்விகி, சொமாட்டோ மற்றும் டன்சோ போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மூலமாகவும் நுகர்வோர் இல்லங்களுக்கே சென்று விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை துவக்க நிகழ்ச்சியில் பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் வள்ளலார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
நாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா?.....மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்!: விசாரணை குழு நியாயமாக, நேர்மையாக விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை..!!
தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக ஆக்கிய ஆட்சிதான் இந்த ஆட்சி..: மு.க.ஸ்டாலின் காணொலியில் பேச்சு
ஆல் பாஸ் எதிரொலி!: நாளை முதல் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!
உயர் அழுத்த மின்சார கம்பி அருந்ததால் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை துண்டிப்பு!: பொதுமக்கள் அவதி..!!
வெளிநாடுகளில் இருந்து ரூ.1331 கோடி நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிப்பு தொடர்பாக பதிலளிக்க மின்வாரியத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்..!!
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்