வெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை முடக்கும் புதிய மாஸ்க்
2020-11-03@ 16:02:53

கடந்த வருட பிற்பகுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்து பின்னர் இவ் வருட மார்ச் மாதத்திலிருந்து உலகை உலுக்கி வருகிறது கொரோனா வைரஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதன் தாக்கம் குறைந்திருந்த போதிலும் தற்போது மீண்டும் உலக நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் MIT நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் புதிய வகை மாஸ்க் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னர் பயன்பாட்டில் உள்ள மாஸ்க் வகைகள் கொரோனா வைரஸ் உட்பட ஏனைய நுண்கிருமிகளை வடிகட்டும் ஆற்றல் கொண்டனவாக இருந்தன. ஆனால் இப் புதிய மாஸ்க் ஆனது வெப்பநிலையை பிறப்பித்து கொரோனா வைரஸ் உட்பட ஏனைய நுண்கிருமிகளின் செயற்பாடுகளையும் முடக்கவல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த மாஸ்க்கின் மாதிரி வடிவமைக்கப்பட்டு வருவதுடன், விரைவில் அசல் மாஸ்க் தாயரிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் செய்திகள்
துருக்கியின் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்
மீண்டும் அமெரிக்காவில் தோன்றிய மர்ம தூண்
எரிவாயு ரகசியம்
'டியன்வென் - 1' விண்கலம்
உலகின் எடை மிக்க விலங்கு
புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது சீனா
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்