SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் டீகோ மரடோனா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

2020-11-03@ 14:12:27

அர்ஜென்டினா: அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் டீகோ மரடோனா உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் டீகோ மரடோனா (வயது 60).  கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.  இந்நிலையில், இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.  இதனால் அவரை அர்ஜென்டினாவின் லா பிளாட்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்து உள்ளனர்.

கொரோனா பாதிப்புக்காக மரடோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என மருத்துவர் லியோபோல்டோ லூக் கூறினார். அவருக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்தார்.  உடல் பாதிப்புகள் எதுவும் இல்லை என கூறியுள்ளார். இதேபோன்று, அதிக அளவில் மதுபானம் உட்கொண்டது, மனரீதியாக பாதிக்கப்பட்டது மற்றும் அவரது அனைத்து சுகாதார விசயங்களாலும் மரடோனாவின் உடல்நிலையில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  இதனால் மரடோனா மருத்துவமனையில் தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று கொள்வார் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்