ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் திட்டவட்டம்
2020-11-03@ 11:45:09

டெல்லி : ஊழல் கண்காணிப்பு வாரம் என்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பதற்கான அரசின் உறுதியை வலியுறுத்துவதற்கான ஒரு நிகழ்வு என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார். நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைகள் துறையின் அலுவலர்களுக்கு ஒருமைப்பாட்டு உறுதிமொழியை செய்து வைத்த அவர், ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று கூறினார்.
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைகள் துறையின் 'பெருந்தொற்றின் போது சிறந்த ஆளுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சிந்தனைப் பெட்டி என்னும் திட்டத்தை இந்த நிகழ்வின் போது அமைச்சர் தொடங்கி வைத்தார்.'மின்-ஆளுகையில் சிறந்த நடவடிக்கைகள்' குறித்த சமூக ஊடக பதிவுகளையும் அவர் வெளியிட்டார். பிரதமரின் தாரக மந்திரமான ஊழலுக்கு எதிரான பூஜ்ய சகிப்புத் தன்மையை தனது உரையில் வலியுறுத்திய ஜிதேந்திர சிங், ஊழலுக்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.பெருந்தொற்றின் போது சிறந்த ஆளுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சிந்தனைப் பெட்டி' திட்டம் மைகவ் தளத்திலும், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைகள் துறையாலும் செயல்படுத்தப்படும்..
மேலும் செய்திகள்
பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!: டாப்ஸி, காஷ்யப் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்..!!
தொடர்ந்து குறையும் குணமடைந்தோர் விகிதம்... தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 100க்கு கீழே சென்றது : இந்தியாவில் கொரோனா நிலவரம்!!
100வது நாளை எட்டியது டெல்லி விவசாயிகளின் போராட்டம் : தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவு!!
விலங்குகளையும், அவற்றிற்கான வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த வேண்டும்..! உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலை உயர்வு: எம்எல்ஏ சீனிவாசகவுடா குற்றச்சாட்டு
ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் சங்கம் அமைக்க வேண்டும்: வட்டார கல்வி அதிகாரி வேண்டுகோள்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்