பிரபல ரவுடி சுற்றிவளைத்து கைது
2020-11-03@ 00:23:24

பெரம்பூர்: வில்லிவாக்கத்தில் கடந்த மாதம் வழக்கறிஞர் ராஜேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சூழ்ச்சி சுரேஷ் மற்றும் அருண் பாண்டியன் (27) ஆகிய இருவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதில் சூழ்ச்சி சுரேஷ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அருண்பாண்டியனை தேடிவந்தனர். அவரது செல்போன் சிக்னலை டிராக் செய்தபோது, மரக்காணம் பகுதியில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து, சென்னை கொண்டு வந்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது 4 கொலை வழக்கு, 5 கொலை முயற்சி உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்
காவலர் உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசாணை இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமலுக்கு வருமா? மக்களிடையே குழப்பம்
தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி
கம்பம் சுருளி அருவியில் குளிக்க திடீர் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிப்பால் பதற்றம்: காவி சால்வையை போலீசார் உடனடியாக அகற்றி நடவடிக்கை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்