திராவிடம், ஆரியம் பிரித்துப்பார்ப்பது தவறு பாஜவினர் செல்வாக்கை வளர்க்க இந்துத்துவாவை அழுத்தமாக கூறுவார்கள்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து
2020-11-01@ 01:25:11

திருச்செந்தூர்: திராவிடம், ஆரியம் என்று பாஜவினர் பிரித்துப்பார்ப்பது தவறு, என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி: அதிமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார். தமிழகம், முதல்வர் எடப்பாடி கையிலும், இந்தியா பிரதமர் கையிலும் பாதுகாப்பாக உள்ளது. மனு தர்மத்தில் பெண்களை பற்றி அவதூறான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மனு தர்மத்தில் நல்ல பல கருத்துக்கள் உள்ளன. ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். திராவிடம், ஆரியம் என்று பிரித்துப் பேசுவது தவறு. அண்ணாவே ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றுதான் கூறினார். எனவே ஆரியம், திராவிடம் என்று பிரிக்க வேண்டாம். பாஜவினர் தங்கள் செல்வாக்கை வளர்க்க இந்துத்துவா கொள்கையை கொஞ்சம் அழுத்தமாக கூறுவார்கள். இவ்வாறு ராஜேந்திரபாலாஜி கூறினார்.
Tags:
Dravidian Aryan segregation is wrong BJP will press for influence development Hindutva says Minister Rajendrapalaji திராவிடம் ஆரியம் பிரித்துப்பார்ப்பது தவறு பாஜவினர் செல்வாக்கை வளர்க்க இந்துத்துவாவை அழுத்தமாக கூறுவார்கள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்துமேலும் செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா!!
நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தல்!: கூட்டம் கூட்டமாக அமரவைத்து நேர்காணல் நடத்துகிறது அதிமுக..!!
வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்..! முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதை முழுமனதோடு வரவேற்கிறேன் : எல். முருகன்
அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்னல்களை மட்டுமே அனுபவித்தோம்
திருப்போரூர் தொகுதி பாமகவுக்கு: அதிமுகவினர் எதிர்ப்பு
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்