அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: கே.எஸ்.அழகிரி பேட்டி
2020-11-01@ 01:22:48

ஒட்டன்சத்திரம்: மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடுக்கு, கவர்னர் கையெழுத்திட்டது எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்இடஒதுக்கீட்டுக்கான அரசாணையில் கவர்னர் கையெழுத்திட்டுள்ளது எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதனைத் தவிர்த்து உண்மைக்கு புறம்பாக அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்று கூறுவது மிகவும் கண்டனத்திற்குரியது. புதுச்சேரியில் காங். முதல்வர் நாராயணசாமி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்தே அதிமுக, தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அரசாணையை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Government School Student 7.5% quota Opposition's fierce struggle victory KS Alagiri interview அரசுப்பள்ளி மாணவர் 7.5% உள்ஒதுக்கீடு எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி கே.எஸ்.அழகிரி பேட்டிமேலும் செய்திகள்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி 20, 21ம் தேதி தேர்தல் பிரச்சாரம்: அதிமுக தலைமை அறிவிப்பு
புரட்சி பாரதம் கட்சியின் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
பாஜ 60 சீட் கேட்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி இன்று பேச்சுவார்த்தை: பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்
ஐஐடியில் சமஸ்கிருத திணிப்பு பாஜ கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளில் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக களப்பணியாற்ற சபதம் ஏற்போம்: அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்
செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் உள்பட 7 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடுநிலையோடு நடக்குமா? அதிமுக மாவட்ட செயலாளர் போல் கலெக்டர் செயல்படுகிறார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்