நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி...!! இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு; 786 பேர் காயம்
2020-10-31@ 08:03:59

துருக்கி: துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. கட்டிட இடிபாட்டிற்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும், முதற்கட்டமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், 419 பேர் காயம் அடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாகவும், 786 பேர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருகுலைந்து போயுள்ளது. ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகள்
ஜோ பைடனின் 100 நாள் செயல் திட்டத்திற்கு பலன்!: அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்று குறைந்து வருவதாக புள்ளி விவரம் தகவல்..!!
கடந்த 7 வாரங்களில் இல்லாத அளவு தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: பாதிப்பு எண்ணிக்கை 11.49 கோடியை தாண்டியது
ஊழல் வழக்கில் மாஜி பிரான்ஸ் அதிபருக்கு சிறை
புதிய கட்சி துவக்கம்?: டிரம்ப் திடீர் அறிவிப்பு
ஊழலில் சிக்கிய முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கோலா சார்க்கோசி-யாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை
எனக்கு என்ட் கார்டே கிடையாது... 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிடலாம் : தோல்விக்கு பிறகு மவுனம் கலைத்த அதிபர் டிரம்ப்!!
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்