ரூ. 6,800 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ராயல சீமா நீர்ப்பாசனத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் : பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
2020-10-30@ 16:03:57

ஆந்திர மாநிலம் )சைலம் அணைக்கட்டிலிருந்து ராயலசீமா பகுதியின் குடிநீர், விவசாயம் மற்றும் தொழிற் தேவைக்காக தண்ணீர் கொண்டு செல்ல ரூ. 6,800 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ராயலசீமா நீர்ப்பாசனத் திட்டம் சுற்றுச்சூழல் அனுமதியின்றி தொடங்கப்பட்டதாலும், இத்திட்டத்திற்கு கிருஷ்ணா நதி மேலாண்மை வாரிய அனுமதியை பெறவில்லை என்பதாலும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தெலங்கானாவை சேர்ந்த கவினொல்லா நிவாஸ் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்தார்.இந்நிலையில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம், இது நீர்ப்பாசனத் திட்டம் என்பதால் சுற்றுச்சூழல் துறை அனுமதி அவசியமில்லை என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு இத்திட்டத்தால் பெரிய அளவிலான நிலப்பரப்பில் சுற்றுச்சூழல் தாக்கம் இருப்பதால் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ம் ஆண்டு கீழ் திட்டத்திற்கு அனுமதி அவசியம். ஏற்கெனவே ஸ்ரீசைலம் அணையிலிருந்து செயல்படுத்தப்படும் பிற திட்டங்களை இத்திட்டம் பாதிக்கும் என்பதால் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை ஆணையத்திடம் உரிய அனுமதி பெறுவதும் அவசியம் என்று தீர்ப்பளித்தனர். மேலும் உரிய அனுமதி இல்லாமல் மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உலக நாடுகளின் பேராதரவுடன் இந்தியா நுழைந்துள்ளது: நாட்டு மக்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை.!!!
டிராக்டர் பேரணியுடன் போராட்டம் முடிந்துவிடாது: பிப்.1-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி...விவசாய சங்கங்கள் அறிவிப்பு.!!!
விவசாயிகள் டிராக்டர் பேரணி: ஜன.26-ம் தேதிக்கு பதிலாக வேறு தேதியை தேர்வு செய்திருக்கலாம்: மத்திய வேளாண் அமைச்சர் தோமர் பேட்டி.!!!
பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுமா?.. ரிசர்வ் வங்கி விளக்கம்
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.!!!
அரசியலில் ஒரு குடும்பத்தில் 1 உறுப்பினர்: நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவர முடியுமா?...பிரதமர் மோடிக்கு மம்தா மருமகன் சவால்.!!!
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்