SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி: 2 நாட்களாக தங்கம் விலை குறைவு: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.37,872-க்கு விற்பனை.!!!

2020-10-30@ 10:52:48

சென்னை: கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டது. மாதத்தின் முதல் நாள்(1ம் தேதி) தங்கம் விலை சவரனுக்கு 48  அதிகரித்து ஒரு சவரன் 38,520க்கும் விற்க்கப்பட்டது. தொடர்ந்து, அடுத்த நாள் 2-ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது.

இருப்பினும், கடந்த 17-ம் தேதி சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.183 குறைந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து  ரூ.37,520-க்கும், 20-ம் தேதி ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. 21-ம் தேதி சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.37,640க்கும், 22-ம் தேதி ரூ.24 உயர்ந்து ரூ.37,760-க்கும், ரூ.32 உயர்ந்துள்ளது. 23-ம் தேதி சவரனுக்கு ரூ.32  உயர்ந்து ரூ.37,792க்கும், 24-ம் தேதி ரூ.192 குறைந்து ரூ.37,600க்கும், 26-ம் தேதி சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,704க்கும், 27-ம் தேதி ரூ.512 உயர்ந்து ரூ.38,296-க்கும், 28-ம் தேதி சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.38,184-க்கும், நேற்று 29-ம்  தேதி சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,907-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னையில் 22 ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.37,872-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.7 குறைந்து ரூ.4,734 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம்  வெள்ளியின் விலை 90 காசுகள் அதிகரித்து ரூ.65.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் அதிகளவில் விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்க பணம் சேர்த்து  வைத்திருப்பவர்கள் மத்தியில் சற்று சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்