விமானத்தில் கடத்தி வந்த 6.88 கிலோ தங்கம் பறிமுதல்6 பேர் கைது
2020-10-30@ 00:56:52

கோவை: ஷார்ஜாவில் இருந்து நேற்று கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமான பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் நாசர் (35) என்ற பயணி ஆசன வாயில் 2.1 கிலோ எடையிலான தங்கத்தை துகள்களாக அரைத்து அதை இரண்டு பிளாஸ்டிக் கவரில் போட்டு ஆணுறைக்குள் வைத்து சொருகியிருந்தார். இதேபோல் தர்மராஜ் (40) என்பவர் 3 பாக்கெட்டில் 610 கிராம் தங்க துகள்களையும், சாகுல் அமீது (36) என்பவர் 943 கிராம் தங்க துகள்களையும் பாக்கெட்டில் அடைத்து ஆசன வாயில் மறைத்து கடத்தி வந்துள்ளனர். இது தவிர யுவராஜ், பாட்ஷா, சாஜிப் ஆகியோர் தாங்கள் அணிந்து வந்த ஆடைகளில் தங்க துகள்களை பசை போல் அரைத்து வேதிப்பொருட்களுடன் கலந்து ஒட்டி கடத்தி வந்தனர். இந்த 6 பேரையும் கைது செய்த அதிகாரிகள் இவர்களிடமிருந்து ரூ.3.6 கோடி மதிப்பிலான 6.88 கிலோ எடையிலான 24 காரட் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
துபாயில் இருந்து தங்கம் கடத்திய 3 பேர் கைது: ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
அத்தையின் நகையை திருடியவர் நண்பருடன் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை
பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் கைது
அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள் மொபைல் போன் செயலி மூலம் ரூ.80 ஆயிரம் மோசடி
திருக்கழுக்குன்றம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: 4 பேருக்கு வலை
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!