SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போதைபொருள் கடத்தல் வழக்கு: மார்க்சிஸ்ட் கேரள மாநில செயலாளர் மகன் கைது: 4 நாள் போலீஸ் காவல்

2020-10-30@ 00:20:58

திருவனந்தபுரம்: போதை பொருள் கடத்தல் வழக்கில், கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியை  அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் செயலாளராக இருப்பவர் கோடியேரி பாலகிருஷ்ணன். இவரது மகன் பினீஷ் கோடியேரி. இவர் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் மீது கடந்த பல ஆண்டுகளாகவே பலாத்காரம், மோசடி உள்ளிட்ட புகார்கள் கூறப்பட்டு  வருகின்றன. ஆனால், இது ெதாடர்பாக இவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன் பெங்களூருவில் மத்திய போதை பொருள் தடுப்பு துறையினர் நடத்திய சோதனையில் போதை பொருளுடன்  டிவி நடிகை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முகமது அனூப், ரவீந்திரன் ஆகிய 2 பேர் கேரளாைவ சேர்ந்தவர்கள்.

ரவீந்திரனுக்கும் பினீஷ் கோடியேரிக்கும் ெதாடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. முகமது அனூபிற்கு பினீஷ் கோடியேரி லட்சக்கணக்கில் பண உதவி செய்துள்ளார். அது, போதை பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டு  இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதில், பினீஷ் கோடியேரிக்கு பெங்களூருவில் 6 நிதி நிறுவனங்கள் இருந்தது தெரிய வந்தது. இவற்றின் வரவு செலவு விஷயங்களை அவர்  முறையாக தாக்கல் செய்யாததும் தெரிய வந்தது. இதையடுத்து, பினீஷ் கோடியேரியை அமலாக்கத் துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன் ெபங்களூரு அழைத்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் விசாரணை்  நடத்தப்பட்டது.  பின்னர் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். உடனடியாக அவரை பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 4 நாள் காவலில் வைத்து நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பினராய்க்கு நெருக்கடி
தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் மகன் போதை பொருள் கடத்தல் தொடர்பான  வழக்கில் கைது செய்யப்பட்டது பினராய் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்