ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 70 சதவீதம் மாடுகள் விற்பனை
2020-10-29@ 18:21:15

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் வரத்தான மாடுகளில் 70 சதவீதம் விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையம் காவேரிக்கரை அருகில் வியாழன்தோறும் மாட்டு சந்தை நடக்கிறது. அதன்படி இன்று நடந்த மாட்டு சந்தைக்கு, நேற்று இரவு முதலே ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டத்தில் இருந்து மாடுகள் வரத்துவங்கியது. மாடுகளை வாங்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால், சந்தையில் வரத்தான மாடுகளில், 70 சதவீதம் விற்பனையானது.
இது குறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறுகையில், இந்த வாரம் கூடிய சந்தையில் 300 பசு, 100 எருமை, 60 கன்று என 460 மாடுகள் வரத்தானது. இதில், கறவை மாடுகள் ரூ.30ஆயிரம் முதல் ரூ.65ஆயிரம் வரையும், கன்று ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அடுத்த வாரம் மாடுகள் வரத்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.
மேலும் செய்திகள்
9,11ம் வகுப்புகள் திறப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு: அமைச்சர் பேட்டி
வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பு இல்லை அமைச்சர் செங்கோட்டையனை ஆசிரியர்கள் முற்றுகை
வாக்காளர் பட்டியலில் பேரறிஞர் அண்ணா புகைப்படம்
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தைப்பூச தெப்ப திருவிழா ரத்து
நிவர் புயல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேசிய பேரிடர் மேலாண்மை மத்தியக் குழு ஆய்வு
கோயிலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்