கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷணனின் மகன் பினிஷ் கைது: தலைமை செயலகம் பகுதியில் போலீசார் குவிப்பு
2020-10-29@ 18:09:07

திருவனந்தபுரம்: கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷணனின் மகன் பினிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு போதை மருந்து வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் பெங்களுருவில் நடிகைகள் மற்றும் இசை அமைப்பாளர்கள் பெருமளவு இந்த போதை பொருளை பயன்படுத்துவதாகவும், அதைப்போல மற்றவர்களுக்கு விற்பனையில் ஈடுபடுவதாகவும், எழுந்த புகாரை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ச்சியாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ச்சியாக அனிகாவுடன் நடத்திய விசாரணையை தொடர்ந்து 150-க்கும் அதிகமான நடிகை, நடிகர்களிடம் விசாரணை நடத்தினர். அதேபோல கேரளாவை சேர்ந்த முகமது அனிஷிடம் விசாரணை நடத்திய போது பெங்களுருவில் பல்வேறு ஹோட்டல்களில் போதை பொருட்கள் விற்பனை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. இந்நிலையில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷணனின் மகன் பினிஷ் கொடியேரி அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது.
இதனை தொடர்ந்து எதிர்கட்சிங்க்ள் கேரளாவில் பல்வேறு போராட்டங்களை நடத்தின. கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை போதைப்பொருள் கூடாரமாக இருக்கிறது என்றும் அதேபோன்று தலைமை செயலகம் தங்கக்கடத்தல் கும்பலில் கூடாரமாக இருக்கிறது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர். தொடர்ந்து பினிஷ் கொடியேரியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனியிடயே முகமது அனிஷிடம் நடத்திய விசாரணையில் பினிஷ் கொடியேரி தனக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறினார்.
அந்த 50 லட்சம் ரூபாய் எப்படி வந்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பினிஷ் கொடியேரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பினிஷ் கொடியேரி கைதை அடுத்து, கேரள தலைமை செயலகம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
ம.பியில் 2 முறை கடத்தி கொடூரம் 13 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்த கும்பல்: 7 பேர் கைது
பாலகோட் தாக்குதல், 370 சட்டப்பிரிவு உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய முடிவுகளை முன்கூட்டியே அறிந்திருந்த அர்னாப்: வாட்ஸ்அப் உரையாடலில் அம்பலம்
ஆந்திராவில் மதம் மாற்றத்தில் ஈடுபட்டு கோயில்களை திட்டமிட்டு சேதப்படுத்திய பாதிரியார்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
வருகிற 27ம் தேதி விடுதலை? சசிகலா ஆதரவு அதிகாரிகள் ரகசிய ஆலோசனை
நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்