சிறுமியை கொடுமைபடுத்திய சிவில் நீதிபதி சஸ்பெண்ட்
2020-10-29@ 17:14:23

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்திய புகாரில் சிவில் நீதிபதி தீபாலி சர்மா நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் உள்ள மாவட்ட நீதிமன்ற சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் தீபாலி சர்மா. அரித்துவாரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 13 வயது சிறுமி ஒருவர் வீட்டு வேலை செய்து வந்தாள். அவளை பெண் நீதிபதி தீபாலி சர்மா சித்ரவதை செய்து வந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அரித்துவார் மாவட்ட நீதிபதி ராஜேந்திரசிங் அளித்த அறிக்கை அடிப்படையில், 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தீபாலி சர்மா வீட்டில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நீதிபதி வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது, உடலில் காயங்களுடன் இருந்த சிறுமி மீட்கப்பட்டாள். தொடர்ந்து நீதிபதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், நீதிபதி தீபாலி சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரை பணிநீக்கம் செய்ய உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற அமர்வு தீர்மானம் நிறைவேற்றியது. மாநில அரசு பரிந்துரையின் பேரில், அம்மாநில கவர்னரும் ஒப்புதல் அளித்ததால், நீதிபதி தீபாலி சர்மா நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் செய்திகள்
சென்னை தி.நகரில் இல்லத்தில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல முழு நேரமும் இயங்கும்!: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!
வீரியம் குறையாத கொரோனா!: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,286 பேர் பாதிப்பு..மேலும் 91 பேர் உயிரிழப்பு..!!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை
முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்..? டெல்லி எல்லையில் 100-வது நாளை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்
பிரதமர் மோடி வலியுறுத்தல்: உணவு பதப்படுத்துதலில் புரட்சி
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்