தமிழகத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நவ. 1ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு..!!
2020-10-29@ 16:50:43

சென்னை: தமிழகத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் வருகின்ற நவம்பர் 1ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்த அறிக்கையில்: தாமிரபரணி ஆற்றில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 7 கால்வாய்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 கால்வாய்களின் கீழூள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தாமிரபரணி ஆற்றில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய் , தெற்கு பிரதானக் கால்வாய் மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகியவைகளின் கீழூள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து, வருகின்ற நவம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு 2021 மார்ச் 31ம் தேதி வரை 151 நாட்களுக்கு 14,351.67 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மேற்கண்ட கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வேளாண் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு நல்நோக்கத்தில் பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் மேலும் 596 பேருக்கு கொரோனா தொற்று
சிவப்பு பிரிவின் கீழ் செயல்பட சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஒப்புதல் சான்றிதழ்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
கோவிட்-19 தீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட ஜார்கண்ட் அமைச்சர் குணம் அடைந்தார்: எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை தகவல்
பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18ல் தொடங்கும்: அண்ணா பல்கலை அறிவிப்பு
கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் இலங்கையிடம் இருந்து இழப்பீடு வாங்கி தர வேண்டும்: மத்திய அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் அறிவுரை
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!