நாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ.10,000 கோடி செலவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 2031 மார்ச்-க்குள் 736 அணைகளை புனரமைக்க அரசு திட்டம்
2020-10-29@ 16:27:52

டெல்லி: நாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ.10,000 கோடி செலவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2021 ஏப்ரல் முதல் 2031 மார்ச் மாதத்திற்குள் 736 அணைகளை புனரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அணைகள் பாதுகாப்பு, மற்றும் அவைகளை பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தின் அடிப்படியில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 736 அணைகளை தேர்ந்தெடுத்து அந்த அணைகளை புனரமைக்கவும், வலுப்படுத்தவும், உனடியாக திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு 10,211 கோடி ரூபாய் ஒதுக்கவும், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேலும் 2 முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. சணல் பயிரிடும் விவசாயிகள், மற்றும் சணல் பைகளை தயாரிப்பவர்கள் இவர்களுக்கு பலனளிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த சர்க்கரையில் 20% சணல் பைகளிலேயே மூட்டை கட்டப்பட வேண்டும் என்றும், மற்ற உணவு பொருட்களுக்கு 100% சணல் பைகளையே உபயோகப்படுத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தவிர எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல்களில் சேர்ப்பதற்காக எத்தனால் என்ற எரிபொருளை வாங்குகின்றன.
இது சர்க்கரை தயாரிக்கும் போது கூடவே தயாரிக்கப்படும் பொருளாகும். இதன் காரணமாக சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு பலன் கிடைக்கும். மற்றும் கரும்பு விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும் என்பதால் எத்தனாலின் விலையை உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆகவே கூடுதல் விலையிலேயே எண்ணெய் நிறுவனங்கள் எத்தனாலை சர்க்கரை ஆலையிடம் இருந்து விலைக்கு வாங்கும். இந்த 3 முக்கிய முடிவுகள் இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
அயோத்தி ராமர் கோயிலுக்கு கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
கொரோனா நிவாரணத்தொகை கட்டுமான தொழிலாளர்கள் 407 பேருக்கு தலா ரூ.10,000: ஆம் ஆத்மி அரசு அதிரடி
சாலைக்கு இந்தி நடிகர் பெயர்
டெல்லி மக்கள் தொகையில் 50 சதவீதம் கொரோனா பரிசோதனை 1 கோடியை தாண்டியது: வரலாற்று சாதனை என கெஜ்ரிவால் டிவிட்
எம்சிடி ஊழியர்கள் சம்பள நிலுவை விவகாரம் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற செயல்: உயர் நீதிமன்றம் காட்டமான விமர்சனம்
அரசு மற்றும் மாநகராட்சிகளை சேர்ந்த 550 பள்ளி வளாகங்களில் நாப்கின் எரியூட்டிகளை பொருத்த வேண்டும்: முதல்வர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!