இந்தியாவிலேயே முதல் மையம்; கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நவீன தீவிர சிகிச்சை மையம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
2020-10-29@ 15:17:12

சென்னை : கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 29) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
'ஏசிடி பைபர்நெட் லிமிடெட் நிறுவனம், கூட்டாண்மை சமூகப் பொறுப்புச் செயல்பாட்டின் கீழ், சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 10 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தை, கோவிட்-19 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க நன்கொடையாக நிறுவியுள்ளது.
இந்த மையத்தில் 10 படுக்கைகளும், ஒரு செவிலியர் பணிப் பகுதியும் உள்ளது. இந்த மையத்தில் அவசர சிகிச்சை அளிக்கத் தேவையான பிராணவாயு இணைப்புகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைக்கான மருத்துவக் கருவிகள் உள்ளன.
மருத்துவமனைக்குள் கோவிட்-19 சிகிச்சைக்காக எங்கெல்லாம் அவசரப் பிரிவின் அவசியம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் இந்த மையத்தை எடுத்துச் செல்லலாம். நோயாளிகளை ஒரே இடத்தில் இருந்து கவனிக்க மையக் கண்காணிப்பு வசதியும், புகைப்படக் கருவிகளும் உள்ளன. இத்தகைய வசதிகள் கொண்ட இந்த மையம் இந்தியாவிலேயே முதல் மையம் ஆகும்'.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் எம்.ஜி.ஆர். பல முயற்சிகளை தொடங்கினார் : பிரதமர் மோடி புகழாரம்
இனி பயணத்தின் போதே ஒற்றுமை சிலையை கண்டு ரசிக்கலாம் : 8 புதிய ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 1,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி..: பிரதமர் மோடி அறிவிப்பு..!
தட்கல் சிலிண்டர் புக்கிங்: 30 நிமிடத்தில் வீட்டுக்கே வரும் :இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அமலாகிறது
பாஜகவில் சேருகின்றேனா? : திரிணாமுல் எம்பி சதாப்தி ராய் பதில்
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் விகிதம் 2% கீழ் குறைவு : குணமடைந்தோர் விகிதம் 97%ஐ நெருங்கியது!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்