பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை, வலுவான தலைமை காரணமாக கொரோனாவை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது: மத்திய அமைச்சர் பெருமிதம்
2020-10-29@ 15:09:17

டெல்லி : பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. பிரகலாத் சிங் பாட்டீல் பங்கேற்பு பங்கேற்றார்.இந்த கூட்டத்தில் உரையாற்றிய திரு.பிரகலாத் சிங் பாட்டீல், கோவிட் 19 காரணமாக அனைத்து துறைகளின் பொருளாதார செயல்பாடுகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.குறிப்பாக சர்வதேச அளவில் சுற்றுலாத்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவும் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், எனினும், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் வலுவான தலைமை காரணமாக பெருந்தொற்றை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய திரு.பாட்டீல், அந்நிய செலவாணி வருவாய் ஈட்டித் தருவதில் முக்கியமான துறையாக இருப்பதால் வேலைவாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி என இரண்டு பிரிவுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான பங்களிப்பை சுற்றுலாத்துறை வழங்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா வணிகம் உயிர் பெறவும், ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புத்துயிர் பெறவும் இந்திய அரசு பல்வேறு பொருளாதார ஊக்க தொகுப்புகளையும், பல்வேறு நிதி மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று சுட்டிக்காட்டினார். சுற்றுலா வணிகத்துக்கு ஆதரவு தர மாநில அரசுகளும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திரு.பாட்டீல் கூறினார்.
மேலும் செய்திகள்
நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு
ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6 பேர் தீயில் கருகி பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்